இன்றைய நவீன காலகட்டத்தில், நமது அன்றாட வேலைகளில் தொடங்கி முறையான அலுவலக மின்னஞ்சல்களை எழுதுவது வரை அனைத்துத் தேவைகளுக்கும் ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகள் அனைவரின் தோழனாக மாறிவிட்டன. இருப்பினும் ChatGPTயிடம் எதையெல்லாம் கேட்கக் கூடாது என்பது குறித்த சில கடுமையான விதிகள் உள்ளன.
எந்தவொரு கணக்குகள், அமைப்புகள் அல்லது சாதனங்களை Hack செய்ய முடியுமா என்று கேட்க கூடாது.
எதிர்காலத்தைக் கணிக்கச் சொல்லியோ அல்லது சோதிடம் சொல்லச் சொல்லியோ கேட்க கூடாது.
மூன்றாவதாக எனது தேர்வுத் தாளை எழுதித் தாருங்கள் அல்லது எனது வீட்டுப்பாடங்களை செய்து தாருங்கள் என்று கேட்கக் கூடாது. கல்வி நிறுவனங்கள் தற்போது AI-detection tools பயன்படுத்தி வருவதால், Chatbord மூலம் உருவாக்கப்பட்ட பதில்களை உங்களது சொந்த வேலையாகக் காட்டி ஏமாற்ற முயன்றால் அது உங்களைச் கடுமையான சிக்கலில் மாட்டிவிடும்.
நான்காவதாக ஒருவரை எவ்வாறு காயப்படுத்துவது என்று கூறுங்கள் போன்ற வன்முறை சார்ந்த கோரிக்கைகளைச் ChatGPTயிடம் கேட்க கூடாது.
இறுதியாக யாருடைய தனிப்பட்ட தகவல்களையும் கேட்க கூடாது.