32 Views
பொதுவாக 60 வயதைக் கடந்தாலே உடல் தளர்ச்சி, மூட்டு வலி, உடல்நலப் பிரச்சினைகள் எனப் பல்வேறு சவால்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால், 90 வயதிலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு, இளம் வயதினருக்கு இணையாக உடற்பயிற்சி செய்து, சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் கனசாவா (Toshisuke Kanazawa) என்ற தாத்தா.
50 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் போட்டியிட்ட அவர், தனது வயதைப் பொருட்படுத்தாமல் போட்டிக்கான உடல் தயாரிப்புகளில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.
90 வயதில் மேடையேறி, தனது உடற்கட்டமைப்பயும் தசை வலிமையையும் வெளிப்படுத்திய அவரது முயற்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
வயது அதிகரித்தாலும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்துவதே தனது நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.