46 Views
கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்மோல் கர்ப்பை எதிர்கொண்ட சிந்து, 21-13, 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் நேர் செட்களில் வெற்றிபெற்றார்.
இந்தப் போட்டி 32 நிமிடங்களில் நிறைவடைந்தது.ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற்ற French open தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறி இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்த சிந்து, தற்போது தொடர்ந்து இரண்டாவது வாரமாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இறுதிப்போட்டியில் டென்மார்க் வீராங்கனை லைன் ஹோய்மார்க் கியர்ஸ்ஃபெல்ட்டை எதிர்கொள்ளவுள்ளார்.