பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் ஒரு நாள் தொடரில் இலங்கை அணியின் நட்சத்திர வீரரான பவன் ரத்நாயக்க 2 சதங்களை விளாசி அசத்தியுள்ளார்.
இவ்விரு சதங்களுடன் சேர்த்து மொத்தமாக இவ்வாண்டில் 3 சதங்களைப் பெற்றுள்ள பவன் ரத்நாயக்க, 2026இல் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஆகவே, இன்று நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மேலும் ஒரு சதம் விளாசி இவ்வாண்டில் மட்டும் அதிக சதங்கள் பெற்ற வீரர் என்ற சாதனையை பவன் ரத்நாயக்க படைப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த பட்டியலில் இந்திய அணியின் சுப்மன் கில் மற்றும் இங்கிலாந்து அணியின் பென் டக்கட் ஆகியோர் தலா 3 சதங்களுடன் இடம்பெற்றுள்ளனர்.