மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மோகன்லால் அனூப் சத்யன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘லாலேட்டன் 368’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரபிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தந்தை மகள் உறவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.