உருளைக்கிழங்கில் எளிதில் செரிமானமாகும் மாவுச்சத்து காணப்படுகிறது. எனவே பச்சையான உருளைக்கிழங்குச் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுப்புண், குடல் மற்றும் இரைப்பை கோளாறுகள் குணமாகும்.
உருளைக்கிழங்கில் பொட்டாசியம் சத்து மிக அதிகமாக உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
உருளைக்கிழங்கின் தோலில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது குடலின் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
உருளைக்கிழங்கை தோலுடன் சேர்த்து வேகவைத்து சாப்பிடும் போது, உடலுக்குத் தேவையான கல்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் கிடைக்கின்றன. இது எலும்புகளை பலப்படுத்தவும், இரத்த சோகையை தடுக்கவும் உதவும்.
மெலிவாக இருப்பவர்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க, வேகவைத்த உருளைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.