24 Views
1932 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பிலடெல்பியா உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வரும் இந்த ஆமை, நீண்ட காலமாக இனப்பெருக்கம் செய்யாமல் இருந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு அப்ராஸோ (Abrazzo) என்ற மற்றொரு ஆண் ஆமையுடன் இணைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 16 குட்டி ஆமைகள் வெற்றிகரமாகப் பொரிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அழிவின் ஆபத்தில் உள்ள கலாபகோஸ் ஆமைகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதில் இந்தச் சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த அரிய வகை ஆமைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும் இது ஒரு நம்பிக்கையளிக்கும் முன்னேற்றமாக அமைந்துள்ளது.வயது என்பது சாதனைகளுக்குத் தடையல்ல என்பதற்கு இயற்கை அளித்த வியப்பூட்டும் உதாரணமாக இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.