தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெயை சற்று சூடாக்கி, உச்சந்தலையில் வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வேர்களை பலப்படுத்தும்.
வெங்காயச் சாற்றை தலையில் தேய்த்து 1 மணி நேரம் கழித்து அலசினால், முடி உதிர்வு நின்று புதிய முடி வளர உதவும்.
கற்றாழைச் சாற்றை தலையில் தடவி வருவதால் உச்சந்தலையில் உள்ள வறட்சி நீங்கி முடி கொட்டுவது குறையும். அதேவேளை ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தலையில் Pack போல தேய்த்து குளித்தால் முடி உதிர்வு வெகுவாகக் குறைவடையும்.
முட்டை, மீன், நட்ஸ் போன்ற புரதம் நிறைந்த உணவுகளையும், பசலைக்கீரை மற்றும் கீரை வகைகளை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது இரத்தசோகையைத் தவிர்த்து முடி கொட்டுவதையும் தடுக்கும்.
Hair dryer போன்ற அதிக வெப்பம் தரும் Styleing சாதனங்களைத் தவிர்க்கவும்.