88 Views
இலங்கை உணவு வகைகளில் காரசாரமான சுவைக்கு பெயர்பெற்றது இறால் டெவல். ஹோட்டல்களில் கிடைக்கும் இந்த உணவை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
இறால் (Prawns): ½ kg
பெரிய வெங்காயம்: 2
கறி மிளகாய் (Capsicum) /: 2 அல்லது 3
தக்காளி: 1
பச்சை மிளகாய்: 2
இஞ்சி பூண்டு விழுது:
மிளகாய்த்தூள் (Chilli Powder): 2 தேக்கரண்டி
மிளகாய் வத்தல் துண்டுகள் (Chilli Flakes): 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் (Black Pepper Powder): 1 தேக்கரண்டி
சோயா சோஸ் (Soy Sauce): 1 தேக்கரண்டி
தக்காளி சோஸ் (Tomato Sauce): 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்: ¼ தேக்கரண்டி
எண்ணெய், உப்பு, எலுமிச்சை சாறு: தேவையான அளவு
முதலில், சுத்தம் செய்த இறாலுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பின்னர், பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி இறாலைச் சிறிது நேரம் வதக்கித் தனியாக எடுத்துவைக்கவும். அதே பாத்திரத்தில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் குடமிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளி, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மிளகாய் வத்தல் துண்டுகள், சோயா சோஸ் மற்றும் தக்காளிச் சோஸ் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளற வேண்டும்.
இறுதியாக, வதக்கி வைத்த இறாலை மசாலா கலவையுடன் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாகப் பிரட்டினால் சுவையான இறால் டெவல் தயார். இறாலை அதிக நேரம் சமைக்காமல் இருப்பது அதன் மென்மையைப் பாதுகாக்க உதவும். காரசாரமான இந்த உணவைப் பிரைட் ரைஸ், பரோட்டா அல்லது சூடான சோறுடன் சேர்த்துப் பரிமாறலாம். வீட்டிலேயே உணவகச் சுவையை அனுபவிக்க விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாகும்.