இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா ஐ.சி.சி ஆண்கள் T20 துடுப்பாட்ட தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்ற 3வது T20 போட்டியில், 199 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்காக
அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடினார். வெறும் 35 பந்துகளில் சதத்தை எட்டிய அவர், 38 பந்துகளில் 113 ஓட்டங்களைக் குவித்தார்.
இந்நிலையில், ஐ.சி.சி ஆண்கள் T20 துடுப்பாட்ட தரவரிசையில் அபிஷேக் சர்மா 897 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.