குறிப்பாக, சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பது, ஹோர்மோன் மாற்றங்கள், முகப்பருக்கள் குணமடைந்த பின்னர் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் சருமத்தில் ஏற்படும் ஒவ்வாமை ஆகியவை இதற்குக் காரணமாகும் .
சிலருக்கு கர்ப்பகால ஹோர்மோன் மாற்றங்கள் அல்லது குறிப்பிட்ட மருந்துகளின் பயன்பாடு காரணமாகவும் சருமத்தில் கருமையான திட்டுகள் தோன்றலாம். மேலும், சருமத்திற்குப் பொருந்தாத அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது, கடுமையான முறையில் சருமத்தைத் தேய்த்துச் சுத்தம் செய்வது போன்றவையும் நிறமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
சருமத்தின் நிறத்தைச் சீராகப் பராமரிக்க, தினமும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பளிக்கும் SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீமைப் பயன்படுத்துவது அவசியம்.
சருமத்திற்கு ஏற்ற மென்மையான சுத்தப்படுத்தி மற்றும் ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்துவதுடன், புதிய அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். கரும்புள்ளிகள் திடீரெனத் தோன்றினாலோ, வேகமாக அதிகரித்தாலோ அல்லது நீண்ட காலமாகக் குறையாமல் இருந்தாலோ தோல் மருத்துவரை அணுகுவது சிறந்தது.