44 Views
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் முத்தரப்புத் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், இலங்கை அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. லாகூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் 110 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று எட்டு விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் தில்ஷான் மதுஷங்க ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இதன்மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
இத்தோல்வி குறித்துப் பேசிய பாகிஸ்தான் அணித்தலைவர் ஷஹீன் ஷா அப்ரிடி, அணியின் துடுப்பாட்ட வரிசை விரைவாக விக்கெட்டுகளை இழப்பது கவலையளிப்பதாகத் தெரிவித்தார். அடுத்த மூன்று நாட்களில் குறைபாடுகளைச் சரிசெய்து பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகவும், கடந்த போட்டிகளில் பெற்ற வெற்றிகளிலிருந்து சாதகமான அம்சங்களை எடுத்துக்கொண்டு இறுதிப்போட்டியில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.