Apple நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய iPhone Duo Smartphone க்கான முன்பதிவுகள் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் பல வகை மின்கலன் சேமிப்புத் திறன் மற்றும் நிறங்களைக் கொண்ட சாதனங்களின் விநியோகத் திகதிகள் தாமதமடைந்துள்ளன.
இந்தத் தொலைபேசியில் 5.4 அங்குல வெளித்திரையும், விரிக்கும்போது 7.6 அங்குலமாக மாறும் உள்திரையும் இடம்பெற்றுள்ளன. ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளைப் பயன்படுத்தும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தொலைபேசிக்கு ஏற்பட்டுள்ள அதிக கேள்வி காரணமாக, சில வாடிக்கையாளர்கள் தங்களது சாதனங்களைப் பெற 2027 ஜனவரி மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.