ஆட்டம் போட வைக்கும் இசையால் அனைவரையும் ஈர்த்து வருபவர் இசையமைப்பாளர் அனிருத். அடுத்தடுத்து வெற்றித் திரைப்படங்களுக்கு இசையமைத்து, திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் இசையில் சமீபத்தில் 'ஜெயிலர் 2' திரைப்படமும் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே அனிருத்தின் காதல் குறித்த தகவல்கள் பெரும் பரபரப்பை உண்டாக்கி வருகின்றன. அதாவது பிரபல சினிமா தயாரிப்பாளரான கலாநிதிமாறனின் மகளும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் கிரிக்கெட் அணியின் நிர்வாக பொறுப்பாளருமான காவ்யா மாறனும், அனிருத்தும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இதுகுறித்து இருதரப்பில் இருந்தும் மவுனம் மட்டுமே பதிலாக இருந்து வந்தது.
தற்போது இந்தப் பேச்சு அடுத்த கட்டத்தை எட்டி, இருவரும் திருமண வாழ்க்கையில் இணையத் தயாராகி இருக்கிறார்கள். அதன்படி கிரீஸ் நாட்டில் நவம்பர் 11ஆம் திகதி அனிருத்-காவ்யா மாறன் திருமணத்தை நடத்திட இரு குடும்பத்தாரும் முடிவு செய்துள்ளார்கள்.