பொன்னாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவடையும் மற்றும் கண் எரிச்சல், கண் சிவத்தல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
எடை குறைவாக இருப்பவர்கள் துவரம் பருப்புடன் நெய் சேர்த்து இந்தக் கீரையைச் சாப்பிட்டால் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் மிளகு மற்றும் உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம்.
பொன்னாங்கண்ணி கீரையை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் சூடாக்கி, மெல்லிய சூட்டில் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு, ஒற்றைத்தலைவலி மற்றும் கண் நோய்கள் நீங்கும். தோல் பளபளப்பாகும்.
உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்து சோர்வைப் போக்கி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க பொன்னாங்கண்ணி கீரை உதவுகிறது.பாலூட்டும் தாய்மார்களுக்குத் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பொன்னாங்கண்ணி கீரை உதவுகிறது.
பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வீக்கம், இரத்தக் கசிவு குணமாகும்.