மத்தி மீன், நெத்திலி, கணவாய் போன்ற மீன்களை சாப்பிட வேண்டும். இவற்றில் ஒமேகா 3 அதிகமாக காணப்படுவதால் இது மூட்டு வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது
பிரண்டைக் கீரை, முருங்கைக் கீரை மற்றும் பாலக்கீரை ஆகியவற்றில் கல்சியம் நிறைந்துள்ளது. குறிப்பாக பிரண்டை கீரை மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும் எனவே இவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மூட்டுகளுக்கு இடையே உள்ள திரவம் வறண்டு போகாமல் இருக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
வெந்தயத்தில் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த நீரைக் குடித்துவிட்டு வெந்தயத்தையும் மென்று சாப்பிடலாம் இவை மூட்டு வலிக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
பாதாம் பருப்புடன் சிறிதளவு கசகசா சேர்த்து அரைத்து, பாலில் கலந்து குடித்து வந்தால் மூட்டு வலி குறையும்.
சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களை மாற்றி, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் பயன்படுத்துவது மூட்டுகளுக்கு மிக நல்லது. மிதமான அளவில் சுத்தமான பசு நெய்யை உணவில் சேர்த்துக் சேர்த்துக்கொள்ள வேண்டும்.