54 Views
இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்குத் திரும்புவது குறித்து அணித்தலைவர் சுப்மன் கில் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். காயம் காரணமாக நீண்டகாலமாகப் போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் பாண்டியா, விரைவில் முழுமையான உடற்தகுதியைப் பெற்று மீண்டும் களமிறங்குவார் என நம்புவதாக கில் தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பாகச் செயல்படக்கூடிய முக்கியமான வீரர் எனக் குறிப்பிட்ட கில், அவரைப் போன்ற வேகப்பந்து வீசும் சகலதுறை வீரர்கள் அணிக்குக் கிடைப்பது அரிது என்றும் தெரிவித்துள்ளார். பாண்டியாவின் காயம் தொடர்பாக அவருடன் பலமுறை கலந்துரையாடியுள்ளதாகவும், அவர் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகி வருவதாகவும் கில் கூறியுள்ளார்.
மேலும், இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்கு முன்னர் பாண்டியா உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அணிக்குத் திரும்பினால் ஏழாவது மற்றும் எட்டாவது துடுப்பாட்ட வரிசைகளில் அணியின் பலம் அதிகரிப்பதுடன், அணியின் சமநிலையும் மேம்படும் என சுப்மன் கில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.