55 Views
ஒருநாள் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டும்போது அதிக ஓட்டங்களைக் குவித்த சச்சின் டெண்டுல்கரின் 8,720 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடிக்க கோலிக்கு மேலும் 54 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன. மேலும், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராகத் திகழும் ரிக்கி பொண்டிங்கின் 1,971 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 75 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.
அதேவேளை, ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது வீரராகக் களமிறங்கி 13,000 ஓட்டங்களைக் குவித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற கோலிக்கு இன்னும் 12 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. மேலும், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு எதிரான சர்வதேசப் போட்டிகளில் 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற சாதனையில் சச்சின் டெண்டுல்கருடன் சமநிலையில் உள்ள கோலி, மேலும் ஒரு அரைச்சதம் பெற்றால் புதிய சாதனையை நிலைநாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.