52 Views
ஒரு வீரர் நல்ல உடற்தகுதியுடன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி, நாட்டின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தால், அவரைத் தேர்வு செய்வதற்கு அதுவே முக்கிய தகுதியாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2027 உலகக்கிண்ணத் தொடரின்போது ரோஹித் சர்மா 40 வயதையும், விராட் கோலி 38 வயதையும் எட்டியிருப்பார்கள் என்பதால், அவர்களின் பங்கேற்பு குறித்த விவாதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
2024ஆம் ஆண்டு T20 உலகக்கிண்ண வெற்றிக்குப் பின்னர் இருவரும் சர்வதேச T20 போட்டிகளிலிருந்தும், 2025ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றனர். தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் இவ்விரு அனுபவ வீரர்களும், எதிர்வரும் உலகக்கிண்ணத்தில் இடம்பெறுவார்களா என்பது அவர்களின் எதிர்கால ஆட்டத்திறன், உடற்தகுதி மற்றும் தேர்வாளர்களின் முடிவுகளைப் பொறுத்தே அமையும். 2027ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் உலகக்கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது.