43 Views
தேவையான பொருட்கள்:
* வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
* துருவிய சீஸ் – ½ கோப்பை
* மிளகுத்தூள் – ½ தேக்கரண்டி
* மிளகாய்த்தூள் – ¼ தேக்கரண்டி
* உப்பு – தேவையான அளவு
* சோளமா – 2 தேக்கரண்டி
* Bread தூள் – ½ கோப்பை
* கடலை மா – 2 தேக்கரண்டி
* தண்ணீர் – தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக்கொள்ளவும். அதனுடன் துருவிய சீஸ், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் சோளமா சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இந்தக் கலவையைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, நடுவில் சிறிதளவு சீஸ் வைத்தும் மூடிக்கொள்ளலாம்.
பின்னர் கடலைமாவினைத் தண்ணீரில் கலந்து கரைத்துக்கொள்ளவும்.
உருண்டைகளை இந்தக் கலவையில் இட்டு Bread தூளில் தோய்த்துஎடுக்கவும் .
பின்னர், சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் பொரித்தெடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு cheese balls தயார்!