செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு மத்தியில், 2027ஆம் ஆண்டில் AI Cloud நிறுவனங்கள் பெரும் நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். AI சேவைகளுக்குத் தேவையான கணினி வளங்களை வாடகைக்கு வழங்கும் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நிதி நெருக்கடியால் பாதிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
AI தரவு மையங்களை அமைப்பதற்கும், விலையுயர்ந்த கணினிச் சில்லுகளைப் பெறுவதற்கும் அதிக முதலீடு தேவைப்படுகிறது. இந்நிலையில், கடன் உதவிகள் கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் வருமானப் பற்றாக்குறை காரணமாகப் பல நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதில் சவால்களை எதிர்கொள்ளலாம் என கணிக்கப்படுகிறது.
இந்த நெருக்கடியால் சில நிறுவனங்கள் மூடப்படுவதுடன், ஏனையவை பெரிய நிறுவனங்களுடன் இணையும் நிலையும் உருவாகலாம் என மஸ்க் குறிப்பிட்டுள்ளார். இதனால், எதிர்வரும் ஆண்டுகளில் AI துறையின் வளர்ச்சியுடன் அதன் நிதி நிலைத்தன்மையும் முக்கியமான விவாதமாக மாறியுள்ளது.