44 Views
முதலாவதாக, இணையத்தளங்களின் வடிவமைப்பு உண்மையாகத் தெரிந்தாலும், அதன் URL முகவரியைக் கவனமாகச் சரிபார்க்க வேண்டும்; போலித் தளங்களில் எழுத்துப்பிழைகள் அல்லது சந்தேகத்திற்குரிய Domine பெயர்கள் இருக்கும். இரண்டாவதாக, கூகுள் போன்ற தேடுபொறிகளில் தேடும்போது முதன்மையாக வரும் "Sponsored" அல்லது "Ad" எனக் குறிப்பிடப்பட்ட விளம்பர இணைப்புகளைக் click செய்யாமல், அதிகாரப்பூர்வ இணைய முகவரியை நேரடியாக type செய்து செல்ல வேண்டும்.
மூன்றாவதாக, "கணக்கு முடக்கப்படும்" அல்லது "பரிசுத் தொகை" எனக் கூறி உங்களை அவசரப்படுத்தி OTP, கடவுச்சொல் மற்றும் வங்கி விவரங்களைக் கோரும் தளங்களை உடனடியாகத் தவிர்க்க வேண்டும்.
இவற்றுடன் கணக்குகளுக்கு 2-Factor Authentication முறையைப் பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பைத் தரும்.