i phone இல் சிறந்த புகைப்படங்களை எடுக்க அதன் camera அமைப்புகளைச் சரியாகப் பயன்படுத்துவது அவசியம். சில எளிய மாற்றங்கள் மூலம் புகைப்படங்களின் தெளிவு, ஒளியமைப்பு மற்றும் அழகை மேம்படுத்த முடியும்.
முதலாவதாக, புகைப்படம் எடுக்கும்போது திரையில் தோன்றும் சூரியன் குறியீட்டைப் பயன்படுத்தி வெளிச்சத்தைச் சரிசெய்யலாம். இரண்டாவதாக, Grid வசதியை இயக்குவதன் மூலம் புகைப்படத்தில் பொருட்களைச் சரியான இடத்தில் அமைக்க முடியும். மூன்றாவதாக, AE/AF Lock வசதி மூலம் குவியம் மற்றும் ஒளியமைப்பை நிலையாக வைத்திருக்கலாம்.
மேலும், Portrait Mode மூலம் பின்னணியை மங்கலாக்கி அழகான உருவப்படங்களை எடுக்கலாம். ஐபோன் மொடல்களில் 48 MP மற்றும் Apple ProRAW வசதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக நுணுக்கங்களுடன் புகைப்படங்களைப் பதிவு செய்து, பின்னர் சிறப்பாகத் திருத்தவும் முடியும். இந்த வசதிகள் அனைத்தும் எல்லா I phone
மொடல்களிலும் கிடைக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.