வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு கலந்து வாயில் 30 வினாடிகள் வைத்து நன்றாகக் கொப்பளித்துத் துப்பவும். இது பல்லில் உள்ள கிருமிகளை அழித்து, வீக்கத்தைக் குறைக்க உதவும்.
ஒரு துணியில் ஐஸ் கட்டிகளைச் சுற்றி முகத்தின் வெளிப்புறத்தில் வலி இருக்கும் கன்னப் பகுதியில் 15 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கவும். இது நரம்புகளை மரத்துப் போகச் செய்து வலியை உடனடியாகக் குறைக்கும்.
ஒரு பல் பூண்டை நன்றாக நசுக்கி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வலி உள்ள பல்லில் வைக்கலாம். பூண்டில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வலியைக் கட்டுப்படுத்தும்.
வலி உள்ள பல்லின் மீது ஒரு கிராம்பை வைத்து மெதுவாக கடிக்கலாம் அல்லது ஒரு சிறிய பஞ்சில் சில துளிகள் கிராம்பு எண்ணெயைத் தடவி வலி இருக்கும் இடத்தில் வைக்கலாம். இதில் உள்ள Eugenol வலி நிவாரணியாகச் செயல்படும்.
சுத்தமான கற்றாழை ஜெல்லை வலி உள்ள ஈறு அல்லது பல்லின் மீது மெதுவாகத் தடவி மசாஜ் செய்யலாம். இது வீக்கத்தைக் குறைத்து குளிர்ச்சியைத் தரும்.
அதிக பல்வலி அல்லது சந்தேகம் இருந்தால் உடனடியாக பல் வைத்தியரை நாடுங்கள்.