60 Views
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக ஜெய் ஷா இரண்டாவது முறையாகவும் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ICC நிர்வாகக் குழுக் கூட்டத்தில், உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ICC தலைவராகப் பொறுப்பேற்ற ஜெய் ஷாவின் தலைமைத்துவத்தின் மீது நிர்வாகக் குழு மீண்டும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. உலகளவில் கிரிக்கெட்டை விரிவுபடுத்துதல், மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் வளர்ந்து வரும் கிரிக்கெட் நாடுகளுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தவுள்ளார்.
மேலும், 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறவுள்ள நிலையில், இவ்விளையாட்டை உலகளவில் மேலும் பிரபலப்படுத்துவது முக்கிய இலக்காகக் காணப்படுகிறது. தம்மீது நம்பிக்கை வைத்த ICC நிர்வாகக் குழுவுக்கு நன்றி தெரிவித்த ஜெய் ஷா, கிரிக்கெட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்குவதற்கும் தொடர்ந்து பணியாற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.