உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து குறைவடைந்தால், இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தி பாதிப்புறும். ஹீமோகுளோபின் என்பது உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஒட்சிசனைக் கொண்டு செல்ல உதவுகின்ற அமிலமாகும். ஆகவே, இரும்புச்சத்து தொடர்பாக விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியமானதொன்றாகும்.
முகம் அல்லது உதடுகள் வெளிறிக் காணப்படுதல், இதயத் துடிப்பு அதிகரித்தல், மூச்சுத்திணறல், நகங்கள் எளிதில் உடைதல் போன்ற மாற்றங்கள் உடலில் தொடர்ந்து காணப்பட்டால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
இரும்புச்சத்துக் குறைபாட்டைத் தடுக்க; இறைச்சி, மீன், பருப்பு வகைகள், கீரைகள் மற்றும் இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட உணவுகளைச் சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக உட்கொள்ள வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள Vitamin C, தாவர உணவுகளிலிருந்து இரும்புச்சத்து உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. இவற்றுடன் முக்கியமாக, மருத்துவரின் ஆலோசனையின்றி இரும்புச்சத்து மாத்திரைகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.