நவம்பர் 19ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமாகும் இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடும் நியூசிலாந்து குழாம் தொடர்பான விபரம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
அதன்படி வெளியிடப்பட்டிருக்கும் நியூசிலாந்து குழாத்தில் முக்கிய வீரர்களான ரச்சின் ரவீந்திரா, டெவோன் கொன்வே மற்றும் டொம் ப்ளன்டெல் ஆகியோர் உபாதை பாதிப்புகளுக்குப் பின்னர் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை நியூசிலாந்து தரப்பினை இந்திய தொடரில் இருந்து BJ வாட்லிங் துடுப்பாட்டப் பயிற்சியாளராக வழிநடாத்தவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.