இங்கிலாந்தில் உள்ள Borrowdale என்ற இடத்தில் ஒரு பெரிய புயலுக்குப் பின்னர் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அப்போது அங்கு கறுப்பான ஒரு பொருள் நிலத்திற்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதுதான் Graphite. ஆரம்பத்தில் இந்த Graphiteஐ மக்கள் தங்களின் ஆடுகளின் மீது அடையாளமிடுவதற்குப் பயன்படுத்தினர். அது காகிதத்திலும் எளிதாக எழுத உதவியதால், அதை எழுதும் கருவியாக அதை மாற்றினர்.
ஆரம்பத்தில் மக்கள் Graphite துண்டுகளை அப்படியே கைகளில் பிடித்து எழுதினர் அதன் பின்னர் Graphite துண்டுகளைச் சுற்றி நூல்களைச் சுற்றியும், பின்னர் மரக் குச்சிகளுக்கு நடுவில் Graphiteஐ வைத்தும் பயன்படுத்தத் தொடங்கினர். இதுவே தற்போதைய பென்சில் வடிவத்திற்கு அடித்தளமிட்டது.
1795ஆம் ஆண்டில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையே போர் நடந்தபோது, பிரான்சுக்கு Graphite கிடைப்பது தடைபட்டது. அப்போது பிரெஞ்சு கண்டுபிடிப்பாளரான Nicolas Jacques Conte என்பவர், குறைந்த அளவு Graphite உடன் களிமண்ணைக் கலந்து, அதைச் சுட்டெடுத்து பென்சில் முள் தயாரிக்கும் புதிய முறையைக் கண்டுபிடித்தார்.
இதுவே பென்சில்கள் மலிவாகவும் பரவலாகவும் கிடைக்கக் காரணமாயிற்று. பென்சில்களில் குறிப்பிடப்படும் HB, 2B, 2H போன்ற குறியீடுகள், அந்த பென்சிலின் எழுதுகின்ற முள் எவ்வளவு கருமையாகவும் எவ்வளவு கடினமாகவும் இருக்கும் என்பதைக் குறிக்கின்றன.