Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
11
தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஆர்யவீர் சேவாக்!

SOORIYAN GOSSIP - தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஆர்யவீர் சேவாக்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15 Views
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில், இந்திய இளம் வீரர் ஆர்யவீர் சேவாக் 160 ஓட்டங்களைக் குவித்து அசத்தியுள்ளார். 168 பந்துகளை எதிர்கொண்ட அவர், 17 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசினார். இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக்கின் மகனான ஆர்யவீர், தனது சிறப்பான ஆட்டத்திற்காக ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொண்டார்.

 

போட்டியின் பின்னர் கருத்து தெரிவித்த ஆர்யவீர், தனது தந்தை வீரேந்திர சேவாக்கிடம் அதிக சதமடிப்பதாக வாக்குறுதி அளித்திருந்ததாகக் குறிப்பிட்டார். தனது தந்தைக்கு அதிக சதங்கள் மிகவும் பிடிக்கும் என்பதால், அவருக்காக சிறப்பாக விளையாட வேண்டும் எனத் தீர்மானித்ததாகவும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். ஆரம்பத்தில் ஆடுகளத்தின் தன்மையால் சவால்களை எதிர்கொண்ட போதிலும், நிதானமாக விளையாடி பின்னர் அதிரடி காட்டினார்.

ஆர்யவீர் சேவாக்கின் 160 ஓட்டங்களும், வி.கே. வினீத்தின் 67 ஓட்டங்களும் கைகொடுக்க, இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரக அணி 239 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 70 ஓட்டங்களால் வெற்றிபெற்று, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top