36 Views
இந்தத் தாவரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது பல ஆண்டுகளாக மெதுவாக வளர்ந்து, பின்னர் ஒரே ஒரு முறை பூக்கிறது. பொதுவாக 7 முதல் 30 ஆண்டுகள் வரை வளர்ச்சிப் பருவத்தில் இருக்கும் இந்தத் தாவரம், பூக்கும் காலத்தில் சுமார் இரண்டு மீற்றர் உயரம் வரை வளரக்கூடும். விதைகளை உருவாக்கி பரப்பிய பின்னர், தாவரம் தனது வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்து அழிந்துவிடுகிறது.
சுமார் 4,000 மீற்றருக்கும் அதிகமான உயரமுள்ள குளிர்ச்சியான இமயமலைப் பகுதிகளில் வளரும் இந்த அரிய தாவரம், கடுமையான காலநிலையையும் தாங்கி வளரக்கூடியது. இதன் அரிய இயல்பு காரணமாக, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய தாவரங்களைப் பார்வையிடும்போது அவற்றைத் தொடாமலும் சேதப்படுத்தாமலும் பாதுகாப்பது, இயற்கைச் சூழலையும் உயிரினப் பல்வகைமையையும் காப்பது அவசியமாகும்