அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் Marnus Labuschagne நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் தேர்வுக்குழு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 9 ம் திகதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் 32 வயதான Marnus Labuschagne தேர்வுக்கு பரிசீலிக்கப்பட மாட்டார் என்று அவுஸ்திரேலிய தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.