தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணி விளையாட உள்ளது.உலக டெஸ்ட் Championship தொடரின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தப் போட்டி நவம்பர் மாதம் 15ம் திகதி தொடங்குகிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் 22 வயதான இளம் துடுப்பாட்ட வீரர் மஹ்பிஜுல் இஸ்லாம் முதல்முறையாக தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார்.