இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இரும்புத்திரை’.
இத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.
இத் திரைப்படத்தின் முதல் பாகத்தில் சமந்தா மற்றும் அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இத் திரைப்படம் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் தொழில்நுட்ப உலகில் நிலவும் ஆபத்துகளைப் பேசும் திரைப்படமாக உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.