பண்டைய ரோமானியர்கள் மற்றும் கிரேக்கர்கள் எழுத்துக்களைப் பெரிதாக்கிப் பார்க்கத் தெளிவான பளிங்குக் கற்கள் மற்றும் நீர் நிரப்பப்பட்ட கண்ணாடிக் குடுவைகளைப் பயன்படுத்தினர்.
1286ஆம் ஆண்டில் இத்தாலியின் Pisa நகரில் முதல் அணியக்கூடிய மூக்கு கண்ணாடி உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதில் Salvino Darmate மற்றும் Alessandro della Spina ஆகியோர் முக்கியப் பங்காற்றினர். இரண்டு குவிவு வில்லைகளை மரம், எலும்பு அல்லது உலோகச் சட்டத்தில் இணைத்து, மூக்கின் மேல் பொருத்தும்படி இவை வடிவமைக்கப்பட்டன.
1784ஆம் ஆண்டில் அமெரிக்க அறிஞர் Benjamin Franklin கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை ஆகிய இரண்டையும் ஒரே கண்ணாடியில் சரிசெய்யும் மூக்கு கண்ணாடியை கண்டுபிடித்தார்.
19ஆம் நூற்றாண்டில் இயந்திரங்களின் உதவியுடன் கண்ணாடிகள் பெருமளவில் தயாரிக்கப்பட்டதால், சாமானிய மக்களும் வாங்கும் விலைக்குக் அவை கிடைத்தன. தற்போதைய காலக்கட்டத்தில் எடை குறைந்த பிளாஸ்டிக் வில்லைகள், Contact lenses மற்றும் கணினித் திரைகளில் இருந்து பாதுகாக்கும் Bluelight கண்ணாடிகள் எனப் பல நவீன மாற்றங்கள் உருவாகியுள்ளன.