2017ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பைரவா. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
2017ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பாக வெளியான இத்திரைப்படம் வெளியான முதல் 6 நாட்களிலேயே இந்தியப்பெறுமதிப்படி100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்நிலையில் பைரவா திரைப்படத்தை அடுத்த ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு மறுவெளியீடு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு விஜய் இரசிகர்களை தற்போது மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.