இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தனக்குப் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரராக விராட் கோலியைத் தேர்வு செய்துள்ளார். TNT Sports உடனான கலந்துரையாடலில், ஒவ்வொரு முக்கிய கிரிக்கெட் நாட்டிலிருந்தும் தனக்குப் பிடித்த வீரரைத் தேர்வு செய்யுமாறு ஆண்டர்சனிடம் கேட்கப்பட்டது.
அப்போது இந்திய அணியைப் பொறுத்தவரை விராட் கோலியின் பெயரைக் குறிப்பிட்டார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் இருந்தாலும்,இந்தியாவிலிருந்து தனது விருப்பமான வீரராக கோலியைத் தேர்வு செய்தது இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.