70 Views
சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைத்தளப் பதிவில், 49 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த முதல் கிரிக்கெட் Bat தன்னுடன் இருப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். சிறுவயதில் கிரிக்கெட் மீது கொண்டிருந்த ஆர்வத்தையும், விளையாட்டுப் பயணத்தின் ஆரம்பத்தையும் நினைவுபடுத்தும் வகையில் இந்தப் பதிவு அமைந்துள்ளது.
உலக கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்த சச்சின், தனது ஆரம்பகால நினைவுகளை மறக்காமல் பாதுகாத்து வருவது இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. சிறுவயதுப் புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் இரசிகர்கள், அவரது கிரிக்கெட் பயணத்தின் தொடக்கத்தை நினைவுகூர்ந்து வருகின்றனர்.