78 Views
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் ஓம். இத்திரைப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் ஹிந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் November மாதம் 20ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் Promotion பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தனுஷ் அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், அப்படி ஒரு முடிவெடுத்தாலும் சினிமாவை கைவிடாதீர்கள் என சாய்பல்லவி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஓம் திரைப்படத்தின் நிகழ்ச்சியில் இதுதொடர்பாக பேசிய நடிகை சாய்பல்லவி., “நீங்கள் என்ன செய்தாலும், உங்களுக்கு நல்லதே நடக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இப்போது விஜய் அரசியல் சென்றுவிட்டதால், நடிப்பதில்லை. ஆனால் நீங்கள் தொடர்ந்து நடிப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும், தொடர்ந்து நடிக்கவேண்டும். உங்களை நாங்கள் Miss செய்வோம்” என தெரிவித்துள்ளார்.