பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் குடல் இயக்கம் சீராகி மலச்சிக்கல் பிரச்சினை நீங்குகிறது. குடல் அழற்சி மற்றும் செரிமானமின்மை ஏற்படாமல் தடுக்கவும் இது உதவுகிறது.
பனங்கிழங்கில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் உடலில் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
கல்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை வலுப்படுத்துகின்றன. வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புப்புரை பாதிப்பைத் தடுக்க பனங்கிழங்கு உதவுகிறது. பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் அல்லது கருப்பட்டி சேர்த்துச் சாப்பிடுவது பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உறுப்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
பனங்கிழங்கில் Low Glycemic Index காணப்படுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் அளவோடு இதைச் சாப்பிடலாம். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரோலைக் குறைத்து இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் பனங்கிழங்கு உதவுகிறது.