69 Views
இந்தப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டால்,WhatsApp மூலம் Updates பகுதியில் ஸ்டேட்டஸ் உருவாக்கும்போது தனியாக Location என்ற தேர்வு இடம்பெறும். அதனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பயனர்கள் தங்களின் தற்போதைய இருப்பிடத்தைப் பகிர முடியும். மேலும், துல்லியமான இருப்பிடத்தைப் பகிர விரும்பாதவர்கள் தோராயமான இருப்பிடத்தைத் தெரிவு செய்யவும், தங்களின் தற்போதைய இடத்திற்குப் பதிலாக வேறொரு இடத்தை வரைபடத்தில் தேர்ந்தெடுத்துப் பகிரவும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. பகிரப்படும் இருப்பிடம் புகைப்படத்தின் மீது ஒட்டப்படும் ஸ்டிக்கராக இல்லாமல், இடத்தின் பெயர், முகவரி மற்றும் இருப்பிடக் குறியீடு அடங்கிய வரைபட அட்டையாகத் தோன்றும்.
தற்போது, இந்த வசதி Android சாதனங்களுக்கான WhatsApp Beta பதிப்பு 2.26.45.8-இல் கண்டறியப்பட்டுள்ளதுடன், இன்னும் உருவாக்கப் பணியிலேயே உள்ளது. பீட்டா சோதனையாளர்களுக்குக்கூட இந்த வசதி இதுவரை வெளியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, பொதுப் பயனர்களுக்கு இந்த வசதி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.