உடலின் வெப்பத்தை அதிகரித்து மாதவிடாய் சீராக வர எள் உதவுகிறது. கறுப்பு எள்ளுடன் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து உருண்டையாகச் சாப்பிடுவது கல்சியம் மற்றும் இரும்புச்சத்தைத் தரும்.
பப்பாளியில் உள்ள Carotene estrogen ஹோர்மோனைத் தூண்டுகிறது. இதேவேளை அன்னாசிப்பழத்தில் Bromelain Enzyme கருப்பைச் சுவரை மென்மையாக்கி இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
இஞ்சி சேர்த்து தேநீர் அருந்துவது கருப்பையைச் சுற்றி வெப்பத்தை உருவாக்கி மாதவிடாய் சுழற்சியை எளிதாக்கும். பூசணி விதை, சூரியகாந்தி விதை மற்றும் வெந்தயம் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பது ஹோர்மோன் சமநிலைக்கு உதவுகிறது.
பசலைக்கீரை, முளைக்கீரை, பீட்ரூட், மாதுளை மற்றும் பேரிச்சம்பழம் ஆகியவை இரத்த சோகையைத் தடுத்து மாதவிடாய் சுழற்சியை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.அதிகப்படியான சர்க்கரை, மைதா மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைப்பது ஹோர்மோன் மாற்றங்களைக் கட்டுப்படுத்த உதவும்.