2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க பயணத்தில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் புயலை கிளப்பி உள்ளது.இந்த விவகாரத்தை முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா சமீபத்தில் மீண்டும் சர்ச்சை ஆக்கினார்.
இதற்கிடையே கவாஜாவுக்கு ஆதரவாக பந்தை சேதப்படுத்தியது அணியில் உள்ள எல்லாருக்கும் தெரியும் என்று இதில் நடவடிக்கை எடுக்கப்பட்ட பான்கிராப்ட் கூறியுள்ளார்.இந்தநிலையில் வீரர்கள் நேர்மையாக இருக்க வேண்டும், தவறுகளை ஒப்புக் கொள்பவர்களை அவுஸ்திரேலியர்கள் மன்னிப்பார்கள் என்று அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.