நேஷன்ஸ் கால்பந்துத் தொடரில் இன்று இடம்பெற்ற போர்த்துக்கல் மற்றும் டென்மார்க் அணிகளுக்கு இடையிலான போட்டியில், நட்சத்திரக் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறங்கியிருந்தார்.
சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வை அறிவித்த பின்னர் கலந்து கொள்ளும் முதல் போட்டியாக இது இருந்ததால் இரசிகர்கள் ரொனால்டோவிற்குப் பிரியாவிடை கொடுக்கும் விதமாக, போட்டியின் 7ஆவது நிமிடத்தில் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு இரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ரொனால்டோவை கௌரவித்துள்ளனர்.
குறித்த போட்டியில் ரொனால்டோ நீண்ட காலமாகப் பயன்படுத்திய 7ஆம் இலக்க ஜெர்சியை போர்த்துக்கல் அணி வீரர்கள் அனைவரும் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.