‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராணா டகுபதி. தமிழில் அஜித்குமாருடன் 'ஆரம்பம்', தனுசின் 'எனை நோக்கி பாயும் தோட்டா', விஷ்ணு விஷாலுடன் 'காடன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விடயம் இப்போது பேசுபொருளாகியுள்ளது.
குறித்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கில்தான் இந்திய சினிமா அதிக இலாபத்தை ஈட்டுவதாக தெரிவித்தார்.
மேலும் , இந்தியாவின் மக்கள் தொகையில் தெலுங்கு பேசுபவர்கள் சுமார் 10 சதவீதம் மட்டுமே இருக்கிறோம்.
ஆனால், இந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 70 சதவீத வருவாயை கொடுக்கிறோம்.
தெலுங்கு இரசிகர்கள் மட்டும்தான் மற்ற மொழியில் டப்பிங் செய்யும் படங்களை தங்களது சொந்தப் படங்களைப் போல் பார்க்கின்றனர் என்று கூறியுள்ளார்.