70 Views
கோபுரத்திற்குள் அமைந்துள்ள அருங்காட்சியகம், தரை மட்டத்திலிருந்து 426.875 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளதுடன், வெளிப்புற பார்வைத் தளம் 560.875 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் விண்வெளி அறிவியல், வானியல், நேரத்தைக் கணக்கிடும் முறைகள், பிறை நிலவைக் கண்காணிக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் மக்காவின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அறிந்துகொள்ள முடியும். அத்துடன், பார்வையாளர்கள் உயரமான தளத்திலிருந்து புனித மஸ்ஜிதுல் ஹரமையும் மக்கா நகரின் சுற்றுப்புறங்களையும் பரந்த காட்சியாகக் காணும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
சுமார் 601 மீற்றர் உயரமுடைய இந்தக் கோபுரம் 2012ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்டதுடன், மஸ்ஜிதுல் ஹரமுக்கு அருகிலுள்ள Abraj Al-Bait கட்டடத் தொகுதியின் ஒரு பகுதியாக விளங்குகிறது. இதன் நான்கு பக்கங்களிலும் அமைந்துள்ள கடிகார முகங்கள் ஒவ்வொன்றும் சுமார் 43 மீற்றர் விட்டத்தைக் கொண்டுள்ளன. ஏற்கனவே உலகின் மிக உயரமான கடிகாரக் கோபுரம் மற்றும் மிகப்பெரிய கடிகார முகம் உள்ளிட்ட சாதனைகளைப் பெற்றுள்ள இக்கட்டடம், புதிய அங்கீகாரங்கள் மூலம் மக்காவின் முக்கியமான கட்டடக்கலை மற்றும் சுற்றுலா அடையாளமாக மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.