நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. பழங்களில் உள்ள நார்ச்சத்து, Vitamins மற்றும் தாதுக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்பவையாகும்.
கொய்யாப்பழம், அப்பிள், தோடம்பழம், பேரிக்காய் போன்ற பழங்களை அளவோடு உட்கொள்ளலாம். பழச்சாறுகளைவிட முழுப் பழங்களைத் தேர்ந்தெடுப்பது சிறப்பானதாக இருக்கும். அதேபோல், ஒரே நேரத்தில் அதிகளவு பழங்களை உண்பதைத் தவிர்த்து, தனிப்பட்ட உணவுத் திட்டத்திற்கு ஏற்ப அளவைத் தீர்மானிக்க வேண்டும்.
மேலும், உலர்ந்த பழங்கள் மற்றும் இனிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட பழச்சாறுகளை எடுக்கும்போது கூடுதல் கவனம் தேவை. ஒவ்வொருவரின் இரத்தச் சர்க்கரை அளவும் உடல்நிலையும் மாறுபடுவதால், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைப்படி பழங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லதாகும்.