நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை முடிக்கத் தவறியதற்காக, இந்திய அணி வீரர்களுக்குப் போட்டி ஊதியத்தில் 35 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட 7 ஓவர்கள் குறைவாக வீசியது கண்டறியப்பட்டது. இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அணியை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர் இந்தக் குற்றச்சாட்டையும் நடுவரின் முடிவையும் ஏற்றுக்கொண்டதால் மேலதிக விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.