64 Views
இந்திய அணி பங்களாதேஷிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, தோனியின் அதிரடியான துடுப்பாட்டத்தைப் பார்த்து வியந்ததாகவும், அவரது பந்துகளை எல்லைக்கோட்டுக்கு வெளியே விரட்டும் திறமையில் ஏதோ ஒரு சிறப்பு இருப்பதாக அப்போதைய இந்திய அணித் தலைவர் சௌரவ் கங்குலியிடம் கூறியதாகவும் சச்சின் நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், தோனியுடன் இந்திய அணியின் ஓய்வறையைப் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சியான அனுபவம் எனக் குறிப்பிட்ட சச்சின், இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி தனது முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் பாராட்டியுள்ளார். தாம் எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு சாதனைகளைப் படைத்த தோனியின் கிரிக்கெட் பயணத்துக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.