சோளத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுத்து, குடல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
சோளத்தில் காணப்படும் இரும்புச்சத்து மற்றும் Folic அமிலம் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகின்றன.
சோளத்தில் உள்ள Antioxidants மற்றும் Carotenoidகள் கண்களின் ஆரோக்கியத்தையும், செல்களின் பாதுகாப்பையும் மேம்படுத்துகின்றன.
சோளத்தில் சர்க்கரை அளவு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்க உதவுகிறது. சோளத்தில் உள்ள நார்ச்சத்து வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதனால் அதிகப்படியான பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றது.
கோதுமை போன்ற தானியங்களால் ஒவ்வாமை ஏற்படுபவர்களுக்கு சோளம் ஒரு சிறந்த மாற்றாகும்.