இவை உச்சந்தலையின் இயற்கையான பாதுகாப்புப் படலத்தையும் அதன் சமநிலையையும் பராமரிக்க உதவுகின்றன.
உச்சந்தலையில் வாழும் நுண்ணுயிரிகளின் சமநிலை பாதிக்கப்படும்போது பொடுகு, அரிப்பு, எரிச்சல் மற்றும் சரும அழற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
ஒரு சிலர் தலையில் அதிக எண்ணெயை நீண்ட நேரம் வைத்திருப்பதும் பொருத்தமற்றதாகும். குறிப்பாக Malassezia எனப்படும் பூஞ்சையின் அதிகரிப்பு பொடுகு மற்றும் உச்சந்தலைப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உச்சந்தலையின் இயற்கையான எண்ணெய் சுரப்பு மற்றும் நுண்ணுயிரிகளுக்கு இடையிலான தொடர்புகளும் அதன் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும்.
எனவே, உச்சந்தலையைச் சுத்தமாகப் பராமரிப்பது, தங்களது தலைமுடிக்கு ஏற்ற shampoo பயன்படுத்துவது மற்றும் அதிகப்படியான இரசாயனப் பொருட்களைத் தவிர்ப்பது அவசியமாகும். Scalp Microbiome தொடர்பான ஆய்வுகள் தற்போது வளர்ந்து வரும் நிலையில், அதன் சமநிலையைப் பாதுகாப்பது தலைமுடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும்.